
தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இங்கே வந்து கால்பதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் பிஸினஸ் இப்போது புதிய வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது!
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியை தனியாகச் சொல்லிவிட முடியாது. பாளையங்கோட்டையும் இணைந்த இரட்டை நகரம் அது. மதுரைக்கு தெற்கே திருநெல்வேலிதான் முக்கியமான நகரம் என்பதால் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமில்லை. பல சமூக மக்களின் வாழ்க்கை கலாசாரங்களும் கலந்திருக்கும் திருநெல்வேலியை 'மாதிரி நகரம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.''திருநெல்வேலி என்பது ஒரு நகரம் என்பதையும் தாண்டி அது எங்களின் அடையாளம். எந்த ஊரில் இருந்தாலும் இந்த ஊர்க்காரன் என்பதில் உள்ள பெருமிதம் எதிலும் வராதுல்ல!'' என்கிறார், டோனாவூர் ரூபஸ் ஜான் . ''வெளியில இருந்து பாக்குறதுக்கு வேணும்னா ஊரு பரபரப்பா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா, இங்க கொஞ்ச நாள் தங்குனீங்கன்னா இந்த ஊரை விட்டே போக மாட்டீங்கல்ல'' என்கிறார் இவர். பக்கத்துலயே இண்டஸ்ட்ரி ஏரியா தூத்துக்குடி இருக்குறதால வேலைதேடி வெளியூர் போகணுங்குற அவசியம் இல்லை'' என்றவர், சமீப காலங்களில் இந்த ஊரைச் சுற்றியே கங்கைகொண்டான், நாங்குநேரி போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வந்துவிட்டதால் வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். உண்மைதான் விவசாயம்தான் முக்கியமான தொழில் என்றாலும், புதிய தொழில் வாய்ப்புகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள் நாம் சந்தித்த பலரும்.

நாகர்கோவில் வழியில் நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வந்ததிலிருந்து இந்த பக்கம் வளர்ச்சியின் வேகம் அபாரமாக இருக்கிறது. சங்கரன்கோவில் பக்கம் காற்றாலை மின்சார உற்பத்தில் யூனிட்கள் தொடங்கப்பட்டுள்ளதாலும் இந்த பகுதிகள் கடுமையான விலை ஏற்றத்தில் உள்ளன.
அதேபோல வடக்கு மார்க்கத்தில் மதுரை வழியில் கங்கை கொண்டான் ஏரியாவும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வருவதால் இந்தப் பகுதிகளிலும் இடங்கள் மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த வழியில் எல்காட் தாண்டியும் லே-அவுட்கள் போட்டிருக் கிறார்கள். தூத்துக்குடி வழியில் வளர்ச்சியும் விலையும் ஆவரேஜ்தான் என்றாலும், வி.எம்.சத்திரம் வரை மனைகள் கிடைக்கின்றன. தென்காசி ரோடு, பாபநாசம் வழி ஏரியாக்கள் சுமார் விலை நிலவரம்தான்.

'' புதிய பொருளாதார மண்டலங்கள் இங்கு வந்ததிலிருந்து வெளியூர்களிலிருந்தும் ஆட்கள் வரத்தொடங்கியிருப்பதால், அவர்களுக்கேற்ப குடியிருப்புகள்
தேவையாயிருக்கிறது. ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்கு விரும்புவதால், நெல்லையின் ரியல் எஸ்டேட் தொழிலின் அடுத்த கட்டம் டவுன்ஷிப் மனைகள்தான் என்கிறார், டோனாவூர் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் s.செல்லம்...

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் தொழில்வளர்ச்சி சார்ந்து அடுத்த கட்டத்தில் இருப்பதும் ரியல் எஸ்டேட் நிலவரத்தில் எதிரொலிக்கிறது என்றாலும், விலைகளைப் பொறுத்தவரை இப்போதைய நிலவரப்படி பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக