புதன், 12 அக்டோபர், 2011

வள்ளியூர் பேரூராட்சி





          "ஒரு கட்சியை எப்படி நடத்தக்கூடாது? ஒரு கட்சித் தலைவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது? இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்'’-வள்ளியூரில் நாம் சந்தித்த அந்த நாடார் பிரமுகர் யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா?

வள்ளியூர் பேரூராட்சியின் தலைவர் வேட்பாளர்களான  தி.மு.க. அன்பரசு, அ.தி.மு.க. மீனா மாடசாமியைக் காட்டிலும் பேசப்படுபவராக  இருக்கிறார். சுயேச் சையாக தலைவருக்குப் போட்டியிடும்  சிட்டிங் கவுன்சிலரான லாரன்ஸ், மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் சென்று ஊரையே கலக்கி வரும் இவர்தான்  நெல்லை ச.ம.க.வின் கிழக்கு மா.செ. "அடுத்த கட்சி சின்னத்துல நின்னு அவரு மட்டும் எம்.எல்.ஏ. ஆவாராம், சொந்தக் கட்சியில தகுதி உள்ளவங்களுக்கு கூட்டணி தலைமைகிட்ட பேசி உள்ளாட்சித் தேர்தல்ல சீட் வாங்கித் தர முடியாதாம். அப்புறம் எங்களுக்கெல்லாம் எதுக்கு இந்தக் கட்சி?'’-வள்ளியூரில் கணிசமான வாக்கு வங்கி உள்ள நாடார் சமுதாய ச.ம.க. இளைஞர்களின் இந்த ஆதங்கமே,  “"சுயேச்சையாக வெல்லாம் நீங்கள் போட்டி போடக்கூடாது..'’என்ற தலைவர் சரத்குமாரின் உத்தர வையே மீறச் செய்திருக்கிறது. "நான் ஜெயிப்பேனாக்கும்..'’என்று வலுவாக நிற்கிறார் லாரன்ஸ்.

ச.ம.க.வின் மாநில துணைச்செயலாளர் இளஞ்சேரனும் வள்ளியூர்வாசிதான். அவ ரும் தலைமையின் நடவடிக்கை பிடிக்காமல், தனது உறவினரான தி.மு.க. வேட்பாளர் அன்பரசுவின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்கிறார். ச.ம.க.வினரின் இந்த எதிர்ப்பால் வருத்தத்தில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளர் தரப்பில். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக