சனி, 22 அக்டோபர், 2011

வெற்றி...

திருமலைப்பாண்டி 503 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி...

ஜான் மார்டின் 215 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி...

நமது கருத்து கணிப்பு அபார வெற்றி...

வியாழன், 13 அக்டோபர், 2011

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருநெல்வேலி





தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இங்கே வந்து கால்பதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் பிஸினஸ் இப்போது புதிய வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது!
மிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி நகரம் பல வகைகளிலும் தனிச் சிறப்பான அடையாளங்களைக் கொண்டது. தமிழக கல்வி மற்றும் அரசியல் வரலாற்றில் திருநெல்வேலி பல மாற்றங் களையும் கொண்டு வந்திருக்கிறது என்கிறது வரலாறு. சுத்தமான தமிழ் பேச்சும், தாமிரபரணி தண்ணீரும் இந்த ஊர்க்காரர்களுக்கு மட்டுமே வாய்த்த தனித்த அடையாளங்கள்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியை தனியாகச் சொல்லிவிட முடியாது. பாளையங்கோட்டையும் இணைந்த இரட்டை நகரம் அது. மதுரைக்கு தெற்கே திருநெல்வேலிதான் முக்கியமான நகரம் என்பதால் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமில்லை. பல சமூக மக்களின் வாழ்க்கை கலாசாரங்களும் கலந்திருக்கும் திருநெல்வேலியை 'மாதிரி நகரம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
''திருநெல்வேலி என்பது ஒரு நகரம் என்பதையும் தாண்டி அது எங்களின் அடையாளம். எந்த ஊரில் இருந்தாலும் இந்த ஊர்க்காரன் என்பதில் உள்ள பெருமிதம் எதிலும் வராதுல்ல!'' என்கிறார், டோனாவூர் ரூபஸ் ஜான் . ''வெளியில இருந்து பாக்குறதுக்கு வேணும்னா ஊரு பரபரப்பா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா, இங்க கொஞ்ச நாள் தங்குனீங்கன்னா இந்த ஊரை விட்டே போக மாட்டீங்கல்ல'' என்கிறார் இவர். பக்கத்துலயே இண்டஸ்ட்ரி ஏரியா தூத்துக்குடி இருக்குறதால வேலைதேடி வெளியூர் போகணுங்குற அவசியம் இல்லை'' என்றவர், சமீப காலங்களில் இந்த ஊரைச் சுற்றியே கங்கைகொண்டான், நாங்குநேரி போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வந்துவிட்டதால் வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். உண்மைதான் விவசாயம்தான் முக்கியமான தொழில் என்றாலும், புதிய தொழில் வாய்ப்புகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள் நாம் சந்தித்த பலரும்.
வளர்ச்சியைப் பொறுத்தவரை தொய்வு கிடையாதுதான். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் முக்கியமான வர்த்தக நகரம் நெல்லைதான் என்பதால், தமிழக அளவில் பல முன்னணி வணிக நிறுவனங்கள் யாவும் போட்டி போட்டுக்கொண்டு நெல்லையில் வந்து இறங்குகின்றன. குறிப்பாக வெளியூர்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் போக்குவரத்து செலவுகளை இந்த நிறுவனங்களே அளித்துவிடுவதால் திருவனந்தபுரத்திலிருந்துகூட மக்கள் ஜவுளிகளையும் பொருட்களையும் வாங்கு வதற்கு நெல்லைக்குதான் வருகிறார்களாம். உள்கட்ட மைப்பு வசதிகள், போக்குவரத்து, சாலைவசதி போன்ற விஷயங்களும் நன்றாகவே இருப்பதால் புறநகர விரிவாக்கமும் சற்று வேகமா கவே இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் புறநகர வளர்ச்சி பல மாற்றங்களையும் கண்டுவருகிறதாம்.

நாகர்கோவில் வழியில் நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வந்ததிலிருந்து இந்த பக்கம் வளர்ச்சியின் வேகம் அபாரமாக இருக்கிறது. சங்கரன்கோவில் பக்கம் காற்றாலை மின்சார உற்பத்தில் யூனிட்கள் தொடங்கப்பட்டுள்ளதாலும் இந்த பகுதிகள் கடுமையான விலை ஏற்றத்தில் உள்ளன.
அதேபோல வடக்கு மார்க்கத்தில் மதுரை வழியில் கங்கை கொண்டான் ஏரியாவும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வருவதால் இந்தப் பகுதிகளிலும் இடங்கள் மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த வழியில் எல்காட் தாண்டியும் லே-அவுட்கள் போட்டிருக் கிறார்கள். தூத்துக்குடி வழியில் வளர்ச்சியும் விலையும் ஆவரேஜ்தான் என்றாலும், வி.எம்.சத்திரம் வரை மனைகள் கிடைக்கின்றன. தென்காசி ரோடு, பாபநாசம் வழி ஏரியாக்கள் சுமார் விலை நிலவரம்தான்.
ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்தவரை திருநெல்வேலி இப்போதுதான் 'பீக்’ கட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். மொத்தமாக ஒரே தடவை பணத்தைக் கொடுத்து மனைகள் வாங்குவதாக இருந்தாலும், தவணைதிட்டங்கள் மூலமும் மனைகள் விற்பனை நடக்கின்றன. வேய்ந்தான்குளம், கே.டி.சி. நகர் போன்ற ஒரு சில ஏரியாக்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சமீப காலங்களாக டவுன்ஷிப் குடியிருப்புகள் முறையும் திருநெல்வேலி பக்கம் எட்டிபார்த்துக் கொண்டிருக்கிறது.
'' புதிய பொருளாதார மண்டலங்கள் இங்கு வந்ததிலிருந்து வெளியூர்களிலிருந்தும் ஆட்கள் வரத்தொடங்கியிருப்பதால், அவர்களுக்கேற்ப குடியிருப்புகள்
தேவையாயிருக்கிறது. ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்கு விரும்புவதால், நெல்லையின் ரியல் எஸ்டேட் தொழிலின் அடுத்த கட்டம் டவுன்ஷிப் மனைகள்தான் என்கிறார், டோனாவூர்  சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் s.செல்லம்...
புறநகர் பகுதிகள் முக்கியமான பிஸினஸ் ஏரியாக்களாக வளர்ந்து வருவதால் லே-அவுட் இடங்கள் குறைவாகவே பார்க்க முடிகிறது. தெற்கு மற்றும் மேற்கு பக்கங்களில் விவசாய நிலங்களாகவே இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் வறண்ட பகுதிகளாக இருப்பதும் நெல்லையின் ரியல் எஸ்டேட் பல ஏற்ற இறக்கங்களும் கொண்டதாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் தொழில்வளர்ச்சி சார்ந்து அடுத்த கட்டத்தில் இருப்பதும் ரியல் எஸ்டேட் நிலவரத்தில் எதிரொலிக்கிறது என்றாலும், விலைகளைப் பொறுத்தவரை இப்போதைய நிலவரப்படி பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

சிறுதொழில்


பணப் பிரச்னையை சமாளிக்க பக்கா வழிகள்!

சிறுதொழில்

'வாரம் ஒரு தொழில்’ தொடர் மூலம் தொழில் துவங்க வழிகாட்டிய கையோடு புதிய தொழில் ஆரம்பிக்க தேவைப்படும் நிதிக்கான வழிகள் குறித்து இந்த இதழில் பார்க்கலாம்...
காத்திருக்கும் வங்கிகள்!
புதிதாக சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய விரும்புகி றவர்கள் பணத்திற்கு எங்கே போவது என்று கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தனிப்பட்ட நிதி நிறுவனங்களும் தொழிற்கடன் தருவதற்கு தயாராகவே இருக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு வங்கிகள் சிறு தொழில்களுக்கு எவ்வளவு கடன் தந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும் (பார்க்க பெட்டிச் செய்தி), புதிதாக தொழில் தொடங்க வருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, நம்பிக்கையோடு புறப்படுங்கள். வெற்றி நிச்சயம்!

நீங்கள் யார்?
தொழிற்கடனைப் பெறுவதற்கு முன், நீங்கள் யார் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை வைத்து மூன்று விதமாகப் பிரித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்கள் குறுந் தொழில்கள் (மைக்ரோ) எனவும், 25 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வரைக்குமான தொழில்களை சிறு தொழில்கள் (ஸ்மால்) எனவும் 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்க்குள் நடக்கும் தொழில்களை நடுத்தர தொழில்கள் (மீடியம்) என பிரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புதிதாக தொடங்கப் போகும் தொழில் இந்த மூன்று வகையில் எதில் அடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கான கடனை எங்கு பெறுவது என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரச்னை இருக்காது.
வங்கியே சிறந்தது!
சிறு தொழில்களுக்கான கடனை தர வங்கிகள் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இதில் வங்கிக் கடன்தான் சிறந்தது என்பது அனுபவசாலிகளின் முடிவு. இதற்கு முக்கிய காரணம், வட்டி. பொதுவாக, பொதுத் துறை வங்கிகள் அளிக்கும் தொழிற்கடனுக்கு 13 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. ஆனால், அரசு சாராத தொழில் வங்கிகள் ஓரளவுக்கு தாராளமாகவே கடன் தந்தாலும், அதற்காக வசூலிக்கும் வட்டி விகிதமும் அதிகமே. தனியார் வங்கிகள் 13 முதல் 15% வரை வட்டி விதிக்கின்றன.
இதுவாவது பரவாயில்லை, சில தனியார் நிதி நிறுவனங் களும் சிறு தொழில்களுக்கான கடனைத் தருகின்றன. இந்த கடனுக்கு அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தைக் கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டி (கிட்டத்தட்ட 60 சதவிகிதம்!) இதைக் கொள்ளை வட்டி என்றுதான் சொல்ல வேண்டும். தப்பித் தவறி இந்த கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குண்டுகட்டாக நம்மை தூக்கிக் கொண்டு போய் கிட்னியை எடுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குறித்த காலக் கடன்!
புதிதாக தொழில் தொடங்குபவர்களாக இருக்கட்டும், ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களாக இருக்கட்டும், வங்கிகள் அளிக்கும் குறித்த காலக் கடன் என்கிற இந்த டேர்ம் லோனை தாராளமாக வாங்கலாம். மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை குறுகிய காலக் கடன் என்றும், ஏழு ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை நடுத்தர காலக் கடன் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் திரும்பச் செலுத்தும் கடனை நீண்ட கால கடன் என்றும் சொல்லப் படுகிறது.
இந்த டேர்ம் லோனை பெற உங்களிடம் சொத்து இருக்க வேண்டும். தவிர, இருவர் உங்களுக்கு ஜாமீனும் தரவேண்டும். தொழிலுக்கான முழுப் பணமும் உங்களுக்கு கடனாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களிடமும் 10 முதல் 25% தொகை இருக்க வேண்டும். புதிதாக ஆரம்பிக்கும் தொழிலில் உங்கள் முதலீடு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே தொழில் நடத்துவதில் உங்களுக்கு அக்கறை இருக்கும் என வங்கிகள் நினைப்பதால்தான் அவை இதை எதிர்பார்க்கின்றன.
நடைமுறை மூலதன கடன்!
வங்கி பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'வொர்க்கிங் கேபிட்டல்’. இந்த வொர்க்கிங் கேபிட்டல் இருந்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். 'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ என்று சொல்லப்படும் இந்த நடைமுறை மூலதனக் கடனை வங்கிகளிலிருந்து இரண்டு விதமாகப் பெறலாம். ஒன்று, ஹைப்பாத்திகேஷன் என்று அழைக்கப்படுவது. இந்த முறையில் வங்கி மூலப் பொருளுக்கு கடன் கொடுக்கும். இந்த பொருளை பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் கடன் கிடைக்கும்.
வங்கி தரும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் வங்கியே அதை ஒரு குடோனில் அடைத்து வைத்து, தேவைப்படுகிறபோது நாம் பணம் கொடுத்தால் வங்கி எடுத்துத் தரும். இதன் மூலம் ஒரே சமயத்தில் நாம் மொத்த மூலப் பொருளுக்கும் பணம் திரட்ட வேண்டியதில்லை.
'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ லோன் பெற சொத்தை காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
25 லட்ச ரூபாய் வரையிலான வொர்க்கிங் கேபிட்டல் கடனை பெற எந்த வகையான சொத்தையும் வங்கிகள் அடமானமாக கேட்கக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை. காரணம், சொத்து ஏதும் பெறாமல் கொடுத்த கடன் திரும்ப வராததே இதற்கு காரணம்.

வென்ச்சர் கேபிட்டல்!
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.
பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.
ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.
வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.
மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்!
இதெல்லாம் இருக்கிறதா?
 தொழிற்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது இதெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார் கேபிட்டல் மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.
* புராஜெக்ட் ரிப்போர்ட் கட்டாயம் தேவை!
நீங்கள் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? மூலப் பொருளை எங்கு வாங்குவீர்கள்? உற்பத்தியான பொருளை எங்கே விற்பீர்கள்? என்கிற மாதிரியான கம்ப்ளீட் ரிப்போர்ட்தான் இந்த புராஜெக்ட் ரிப்போர்ட். இந்த ரிப்போர்ட் இல்லாதவர்களிடம் வங்கி அதிகாரிகள் ஒன்றிரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார்கள்.
* 20 - 25% முதலீடு தேவை!
நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கான முழு முதலீட்டையும் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் பங்களிப்பாக 20 - 25% முதலீடு கட்டாயம் இருக்க வேண்டும். இது பணமாகவும் இருக்கலாம்; உங்கள் தொழிலுக்குத் தேவையான ஒரு இயந்திரத்தை வாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது அட்வான்ஸ் தந்திருக்கலாம்; மூலப் பொருளாக வாங்கி வைத்திருக்கலாம். 
* சொத்து, ஜாமீன் தேவை!
வங்கி உங்களுக்கு அளிக்கும் கடனுக்கு ஈடான ஒரு சொத்தையும் ஜாமீனையும் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. பெரிய அளவில் சொத்தோ, ஜாமீனோ கொடுக்க இயலாதவர்கள் வங்கியிடம் கடன் கேட்காமல் இருப்பதே நல்லது.
* அத்தனையும் அறிந்தவராக இருங்கள்!
நீங்கள் தொடங்கப் போகும் தொழில் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக இருங்கள். வங்கி உங்களுக்கு கடனுதவி மட்டுமே செய்யும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை சமாளிக்க வங்கி எந்த விதத்திலும் உதவாது என்பதை மறக்காதீர்கள்.




ஜெயலலிதாவிடம் திரும்பிய கூடங்குளம் விவகாரம்!


கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடந்து​வரும் மக்கள் போராட்டம், அதன் இறுதிக் கட்டத்தைத் தொட்டேவிட்டது. ஜெயலலிதா எடுத்த முயற்சியின் பயனாக, கடந்த 6-ம் தேதி தமிழக அரசின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. எம்.பி-க்கள் தம்பிதுரை, வா.மைத்ரேயன், பி.ஜே.பி. நிர்வாகி சரவணப் பெருமாள் மற்றும்
போராட்டக் குழுவின் சார்பில் சுப.உதயகுமாரன் தலைமையில் வழக்​கறிஞர் சிவசுப்பிரமணியன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் தலைவர் புஷ்பராயன், தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் ஆம்புரோஸ், மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆண்டன் கோமஸ் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர்.
பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை குறித்து சுப.உதயகுமாரன், ''நாங்கள் ஒரு குழுவாக இருந்தாலும், இரண்டு பிரிவுகளாகத்தான் பிரிந்து நின்றோம்...'' என்று பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.
''பிரதமர் வீட்டில் இருந்தே அணு சக்தித் துறையைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பானர்ஜி, எஸ்.கே.ஜெயின், தேசியப் பாதுகாப்பு அறிவுறுத்துனர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பிரதமருடன் சேர்ந்து வந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்றாலும் வந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில், 'நம் நாட்டில் இருக்கும் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை’ என்று சொன்னபிரதமர், எங்கள் கருத்துகளைக் கேட்டு முகம் சிவந்தார். '2008-ம் ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் போடப் பட்டது. அதில் இந்தியா ஏற்படுத்தி இருக்கும் அணு விபத்து இழப்பீட்டுச் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று ரஷ்யா கூறி இருக்கிறதே... அது எப்படி?’ என்று கேட்டதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. 'இந்த ரஷ்யத் தொழில்நுட்பம், தோல்வியடைந்த தொழில்நுட்பம் என்று சொல்லி 25 குறைபாடுகளை ரஷ்யாவில் இருக்கும் ஓர் ஆய்வு நிறுவனமே சொல்லி இருக்கிறதே?’ என்று பல கேள்விகள் கேட்டோம். பிரதமரிடம் இருந்து பதிலே இல்லை...'' என்றார்.
அடுத்துப் பேசிய புஷ்பராயன், ''1988-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது மக்களிடம் கருத்துக் கேட்பது, சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற எந்தத் தகவலையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல, அப்போது இருந்த கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படி, முதல் இரண்டு உலைகளைக் கட்டினார்கள். தற்போது, மேலும் நான்கு உலைகளைக் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். 2011-ம் வருடத்திய கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படிதான் இவர்கள் செயல்பட வேண்டும். அப்படிப் பார்த்தால், இந்த நான்கு உலைகளைக் கட்ட முடியாது. அதை மீறி இவர்கள் செயல்படு​கிறார்​கள்!'' என்று  சொன்​னார்.
'இந்தத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துங்கள்’ என்கிறார்கள் போராட்டக் குழுவினர். 'மக்களின் பயத்தைப் போக்கும் வரை, இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்​துங்கள்’ என்கிறது தமிழக அரசு. இனி செய்ய வேண்டியது எல்லாம் மத்திய அரசின் கையில்... மாநில அரசு போட்ட தீர்மானத் துக்கு மரியாதை இல்லாத வகையில், இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே 'இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என நம் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர்.
முதல்வரின் அடுத்த மூவ் என்னவோ?
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினரின் போராட்டத்தின்  பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் அந்த சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தை களம் இறக்கி இருப்பதாகவும், இந்திய அணு சக்தித் துறையினர் மத்தியப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கி இருப்பதாகப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.  சுப.உதயகுமாரனிடம் கேட்டபோது, ''அணு சக்திக்கு எதிராகப் போராடும் அடித்தட்டு மக்களைக் கொச்சைப்படுத்தும் காரியம் இது. எங்கள் போராட்டத்துக்கான நிதி உள்ளூர் மக்களும் ஏழை மீனவர்களும் வழங்கிய கொடைதான். எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்...'' என்றார் காட்டமாக!

கூடங்குளம் போராட்டம் தீவிரம்: போலீஸார் குவிப்பு

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாலும், கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களை தடுத்து நிறுத்தியதாலும் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

இடிந்தகரையில் இன்று 5-வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் ஆதரவு தெரிவித்து களத்தில் குவிந்துள்ளனர்.

அணு மின் நிலைய பணிக்கு சென்றவர்களை நேற்று கூடங்குளம் பொதுமக்கள்  திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சமரசம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் பேருந்துகளில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தபோது, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போலீஸார் கண்ணீர்புகை குண்டுகளுடன் குவிக்கப்பட்டனர். இதனால் 4 மணி நேரத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்தது.

கூடங்குளம்



             கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதாரங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை(site Evaluation Study)  மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கை யும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. 

தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக  (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடி யாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உப யோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்க வில்லை.  i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங் களும் வசிக்கிறார்கள். ண்ண்) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள். ண்ண்ண்) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

ண்ஸ்) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று ஆஊதஇ சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப் பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும். 

அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலை கீழாகவும் வந்த உதிரி பாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடி வயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை? 

உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளி வரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலிலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம். 

பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. (முதல்வர் ஜெயலலிதா அறிக்கை) 2003 பிப்ரவரி 9-ஆம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலிலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன் குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர் களிலும், கூரைகளிலும்          கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நில நடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுஷிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகஸ்ட் 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ் பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக் களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார். 

2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழக மும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரஷ்யா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரஷ்யா கையை விரித்தது. 2008-ஆம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரஷ்யா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும். 

அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப் படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப் படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன் படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளி யிடும் இந்த கொடிய நச்சை 24, 000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக் குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாய கரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப் படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்து கதிர் வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படு வார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப் படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வரு கின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசிலியம் 134, 136, 137 ஐ சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடி தண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள். 


1988-ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் துவக்க மதிப்பீடே  17, 000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006-ஆம் ஆண்டு இயங்கும் என்றும், 15, 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6, 755 கோடி முதலீடு செய்ய, ரஷ்யா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத் தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரஷ்ய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம். 

நமது நாட்டைவிட எத்தனையோ மடங்கு வளர்ச்சி  அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலிலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத் திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக் கின்றன. புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டிலே கட்டப் பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்ட னர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.

நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்ஜி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப் படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன. கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன் வருவார்கள் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டு கின்றன. மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற் காக மக்களா? ரஷ்யா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா? சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!

அணுமின் நிலைய ஊழியர்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: கூடங்குளத்தில் பரபரப்பு


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த மாதம் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த 7ந் தேதி தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவும், போராட்ட குழுவினரும் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்தனர். அதன் பிறகு இடிந்தரையில் 9 ந்தேதி நடைபெற இருந்த அடையாள உண்ணாவிரதத்துக்கு பதிலாக, விளக்க கூட்டம் நடைபெறும் போராட்ட குழு அமைப்பாளர் உதயகுமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர், தமிழக  முதல்வருக்கு கூடங்குளம் அணுமின்நிலைய பணிகள் திட்டமிட்டபடி தாமதமின்றி நடைபெற தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் எனகேட்டு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இதனால் போராட்ட குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இடிந்தகரையில் கடந்த 9 ந்தேதி போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்குழுவினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்தனர். அதன்படி மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

நேற்று 4 வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அணுமின்நிலைய பணிக்கு சென்றவர்களை கூடங்குளம் பொதுமக்கள்  திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் கூடங்குளத்ததில் இன்றும் பரபரப்புஏற்பட்டது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் பஸ்களில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த பஸ்களை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கூடங்குளம் போலீஸ் நிலையம் அருகே வைத்து வழிமறித்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.



புதன், 12 அக்டோபர், 2011

இன்று மட்டும் வலைப்பதிவை பார்த்தவர்கள்...


நாடுகளின்படி பக்கக்காட்சிகள்
இந்தியா
116
ஓமன்
21
சிங்கப்பூர்
21
கதார்
8
ஐக்கிய அமெரிக்க குடியரசு
7
ரஷ்யா
4
ஐக்கிய அரபு கூட்டாட்சி
2

உலாவிகளின்படி பக்கக்காட்சிகள்
Internet Explorer
72 (38%)
Chrome
62 (33%)
Firefox
46 (24%)
Opera
6 (3%)
Version
1 (<1%)
இயக்க முறைமைகளின்படி பக்கக்காட்சிகள்
Windows
181 (99%)
Nokia
1 (<1%)

வள்ளியூர் பேரூராட்சி





          "ஒரு கட்சியை எப்படி நடத்தக்கூடாது? ஒரு கட்சித் தலைவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது? இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்'’-வள்ளியூரில் நாம் சந்தித்த அந்த நாடார் பிரமுகர் யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா?

வள்ளியூர் பேரூராட்சியின் தலைவர் வேட்பாளர்களான  தி.மு.க. அன்பரசு, அ.தி.மு.க. மீனா மாடசாமியைக் காட்டிலும் பேசப்படுபவராக  இருக்கிறார். சுயேச் சையாக தலைவருக்குப் போட்டியிடும்  சிட்டிங் கவுன்சிலரான லாரன்ஸ், மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் சென்று ஊரையே கலக்கி வரும் இவர்தான்  நெல்லை ச.ம.க.வின் கிழக்கு மா.செ. "அடுத்த கட்சி சின்னத்துல நின்னு அவரு மட்டும் எம்.எல்.ஏ. ஆவாராம், சொந்தக் கட்சியில தகுதி உள்ளவங்களுக்கு கூட்டணி தலைமைகிட்ட பேசி உள்ளாட்சித் தேர்தல்ல சீட் வாங்கித் தர முடியாதாம். அப்புறம் எங்களுக்கெல்லாம் எதுக்கு இந்தக் கட்சி?'’-வள்ளியூரில் கணிசமான வாக்கு வங்கி உள்ள நாடார் சமுதாய ச.ம.க. இளைஞர்களின் இந்த ஆதங்கமே,  “"சுயேச்சையாக வெல்லாம் நீங்கள் போட்டி போடக்கூடாது..'’என்ற தலைவர் சரத்குமாரின் உத்தர வையே மீறச் செய்திருக்கிறது. "நான் ஜெயிப்பேனாக்கும்..'’என்று வலுவாக நிற்கிறார் லாரன்ஸ்.

ச.ம.க.வின் மாநில துணைச்செயலாளர் இளஞ்சேரனும் வள்ளியூர்வாசிதான். அவ ரும் தலைமையின் நடவடிக்கை பிடிக்காமல், தனது உறவினரான தி.மு.க. வேட்பாளர் அன்பரசுவின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்கிறார். ச.ம.க.வினரின் இந்த எதிர்ப்பால் வருத்தத்தில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளர் தரப்பில். 

செவ்வாய், 11 அக்டோபர், 2011

விடுமுறை...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 2 நாட்கள் அரசு விடுமுறை


சென்னை : உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள 17 மற்றும் 19 தேதிகளை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.  ஒரு லட்சத்து 32401 பதவிகளுக்கான தேர்தல் இது. 57 உள்ளாட்சிகளுக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மீதி பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 4 லட்சத்து 11,750 பேர் போட்டியிடுகின்றனர்.

அதில் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 4,876 வாக்குச்சாவடிகளில் 20,525 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 1.25 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் மற்றும் வெளி மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தலைவர்களும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலோடு, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து ஜெயலலிதா  13ம் தேதி முதல் 3 நாட்கள் தெற்கு,  மேற்கு மாவட்டங்கள் மற்றும் சென்னையில் பிரசாரம் செய்கிறார். 12 மற்றும் 14ம் தேதிகளில்  கருணாநிதி சென்னையில் பிரசாரம் செய்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

அவர்களோடு வேட்பாளர்களும் வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 2 நாட்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக 17ம் தேதியும், 2வது கட்டமாக 19ம் தேதியும் நடத்தப்படுகிறது. எனவே இந்த இரு தினங்களுக்கும் செலாவணி முறி சட்டம்&1881, விதி 25ன் கீழ் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அரசு கட்டுபாட்டில் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு 17ம் தேதி தேர்தல் நடக்கும் பகுதிகளிலும், 19ம் தேதி தேர்தல் நடக்கும் பகுதிகளிலும் பொது விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.