வியாழன், 3 நவம்பர், 2011

வேலாயுதம்...முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!


“ மொக்க படம். இளைய தளபதி நடிப்பதை விடுத்து அம்மா அவர்கள் கொடுக்கும் ஆடு மேய்க்க போகலாம். ”
by சுள்ளான் சென்னிமலை ,Chennai,India   Nov 3 2011
 கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் படம் சூப்பர் ஹிட் என்று கதை விடுகிறார்கள். எப்படி என்று தெரியவில்லை ?????? ”
by செந்தில் குமார்,riyadh ,Senegal   Nov 2 2011 2:44PM IST 1:57AM IST
“ விஜய் நீ எல்லாம் எதுக்கு சினிமா ல நடிக்க வர. ப்ளீஸ் தயவு செய்து இனிமேல் இப்படி எல்லாம் நடிக்காத, கேவலம். ”
by suresh,chennai,India   Nov 2 2011 12:18PM IST
“ தூக்குல தொங்கவேண்டியது விஜய் இல்ல நீதான். உன் தல படம் ஓடலன்ன ஏண்டா காண்டாவுற. பொழைக்கிற வேலைய பார்ரா புண்ணாக்கு ”
by பிரியா,chennai,India   Nov 2 2011 11:26AM IST
“ நான் பாதி படம் தான் பார்த்தேன் அதுக்கு மேல முடியலப்பா..... ரெண்டு சாரிடான் மாத்திரை போட்டும் தலை வலி போகல ”
by soundar,Madurai,India   Nov 2 2011 10:34AM IST
“ ஏன்டா இப்படி கொல்றிங்க ... ”
by kalanithi,dubai,India   Nov 2 2011 9:15AM IST
“ டேyவிஜய், விக்ரம் இவங்க கிட்ட கத்துக்கட எப்படி நடிக்கனும்னு, அதை விட்டுட்டு இப்படி பழையபாணி படத்திலெல்லாம் நடிச்சீன்னா நீ பழைய தளபதியா ஆயிடுவே ஜாக்கிரதை ”
by agaradi,khamis,Senegal   Nov 2 2011 3:29AM IST
“ நாலாம்தர ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் போல நல்லாம்தர நடி்கனும் இருக்கத்தான் செய்வார்கள்
by kumar,qatar,India   Nov 2 2011 8:39AM IST
“ உருத்தன கொல்ல ஒரு ஆயுதம் போதும். ஆனா தியேட்டர்ல ஆயிரம் பெற கொல்ல வேலாயுதம் தால தான் முடியும். ”
by வேலு,australia,Australia   Nov 2 2011 7:13AM IST
“ dai நீலாம் திருந்தவே மாடியாடா.... ”
by Sekar,chennai,India   Nov 2 2011 3:50AM IST“ 
ஒரே வீச்சுல ஒருத்தர கொன்னா அது ஆயுதம்; ஆனா ஒரே ஷோ ல ஒரு திடேரையே கொன்னா அது வேலாயுதம் டா ...! ”
by Sam,NYC,Uzbekistan   Nov 2 2011 5:48AM IST
“ டேyவிஜய், விக்ரம் இவங்க கிட்ட கத்துக்கட எப்படி நடிக்கனும்னு, அதை விட்டுட்டு இப்படி பழையபாணி படத்திலெல்லாம் நடிச்சீன்னா நீ பழைய தளபதியா ஆயிடுவே ஜாக்கிரதை ”
by agaradi,khamis,Senegal   Nov 2 2011 3:29AM IST
“ இந்த படம் பார்க்குறதுக்கு தூக்குல தொங்கலாம்...மொக்கை படம் ”
by விஜ“ 
வேஸ்ட் பிலிம். படம் பார்க்கும் பொது ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. ”
by ட்ருஎ பிரிஎந்து,Chennai,India   Nov 1 2011 7:01AM ISTய்,Chennai,India   Nov 1 2011 7:33AM IST
“ உன் படம் செம மொக்கை. யாரும் பார்க்க வேண்டாம் ”
by raj,singapore,India   Oct 31 2011 3:48PM IST
“ விஜய் தயவு செய்து இத மாதிரி சினிமாவில் நடித்து எங்களை பார்க்க வைத்து சகடிக்க வேண்டாம். நல்ல படத்தை தேர்ந்து எடுக்கவும் ”
by mm,salem,India   Oct 31 2011 3:00PM IST
“ அப்பா சாமி, தயவு செய்து யாரும் படம் பாக்காதீங்க. கடி தாங்க முடியல விஜய் படத்துலேயே நம்பர் ஒன் மொக்க படம் ”
by கைலாஷ்,chennai,India   Oct 31 2011 1:52PM IST
“ உனக்கு மனசுல சூப்பர் ஸ்டார்னு நினைப்பா. 7 ம் அறிவு படம் வந்துருக்கு அத பாரு. அப்போவாது உனக்கு அறிவு வருதானு parpom ”
by சங்கர்,nellai,India   Oct 31 2011 1:34PM IST
“ திருப்பாச்சி அந்நியன் ஆயுதம் = வேலாயுதம் படம் ரொம்பா மொக்க விஜய் இனி நீ படம் நடிக்காதே நீ சுத்த வேஸ்ட் ”
by பிரபு,madurai,India   Oct 31 2011 1:30PM IST
“ ஒரு மனிதனை கொல்ல தேவை ஆயுதம்..... தியேட்டருக்கு உள்ள எல்லாரையும் கொல்ல தேவை வேலாயுதம்.... ”
by nadi,woodland,Slovakia   Oct 31 2011 1:25PM IS“ விஜய் அவர்களே நீங்கள் 7 M அறிவு படம் பாத்துட்டிங்களா .... பார்க்கலேன்னா முதல்ல அந்த படத்தை பார்த்துட்டு அப்புறம் இனிமேல் நடிக்க வாங்க... முடியலனா வீட்டுலையே இருங்க.. பாவம் இந்த தமிழ்நாட்டு மக்கள்...... ”
by NPRABHU,BOON LAY,Slovakia   Oct 31 2011 1:09PM ISTT
“ சில சொம்புகள் படம் நல்லா இல்லன்னு பொறாமைல உளர்துக. படம் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு.
by ramakrishnan,chennai,India   Oct 31 2011 12:20PM IST
“ நீயா முடிவெடுத்து நல்ல படமா பண்ணு. உங்கப்பனோட சேர்ந்து நீ இன்னொரு .........ஆவாத. ”
by saajan,chennai,India   Oct 31 2011 12:18PM IST
“ என் நண்பர்கள் சொன்ன வாக்குறுதியை நம்பி இந்த படத்தை நான் பார்த்தேன்... நொந்தேன்... விஜய் உடனே மாற்ற வேண்டியவை என நான் இங்கே சிலவற்றை எண்ணுகிறேன்... அவருடைய கண்மூடி தனமான ரசிகர்கள் இதை எதிர்ப்பார்கள்.... 1 முதலில் அந்த opening பாடல். சும்மா தமிழகத்துக்கே நான் சொந்தம் என்று பாடுவது.... பின்னால் ஒரு 100 பேர் ஆடுவது... 2 ஊரை, நகரத்தை, நாட்டையே காப்பற்றும் கதா பாத்திரம். 3 அவரது அழகில் மயங்கி (?) அவரை காதலிக்கும் அரை லூசு ஹெரோஇன்... 4 எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியான நடை, உடை, பாவனை, digalaaggai இழுத்து இழுத்து பேசுவது.. 5 இவரின் அல்லக்கைகள் தேவையே இல்லாமல் இவரை புகழ்வது... 6 சென்னையிலும் கிராமத்திலும் நடக்கும் கதையில் வெளிநாட்டு பாடல்கள்... (நிறைய ஹீரோக்களும் இதில் அடங்குவர்...) 7 நூறு இரநூறு பேரை அடிப்பது... 8 எல்லா படத்திலும் ஊருக்கு செல்ல பிள்ளையாகவே வருவது.... ”
by Maha ராஜன்,Chennai,India   Oct 31 2011 12:04PM IST
“ சூப்பர் படம். உலக திரைப்படங்களில் இந்த மாதிரி எவனும் நடித்ததில்லை. விஜய் தயவு செய்து படம் நடிக்காதே. என்னோட 250 ரூபாய திருப்பி குடுடா கொய்யால”
by RUFUS,Dohnavur,India   Oct 31 2011 2:25PM IST
“ வேஸ்ட் படம், யாருமே சூப்பர் பாஸ்ட் train கூட ஒட முடியாது. தயவு செஞ்சு பாக்காதிங்க. kindly see the assasins creed 2 game. இந்த விளையாட்டின் காபி தான் இந்த மொக்கை படம். இந்த மொக்கைய பாக்கறதுக்கு பதிலாக இந்த assasins creed 2 game விளையாடுங்க. பணமாவது மிச்சப்படும். விஜய் தயவு செஞ்சு புரிஞ்சுகோங்க உங்களை போல எல்லோருக்கும் காசு சும்மா வந்திடாது. உங்களுக்காக ஏங்கிற ரசிகர்கள நினசுப்பருங்க, இந்த மொக்க படத்துக்கே நல்லாயிருக்குனு சொல்றவங்களுக்காக உண்மையாவே நல்லபடம் கொடுதிங்கான எவ்ளோ சந்தொசபடுவங்க?. ”
by கெளதம் சரண் ,chennai,India   Oct 31 2011 11:11AM IST
“ இந்த படத்த ஏதோ வீடியோ கேமில் இருந்து காப்பி அடிச்சா மாதிரி இருக்கு. ஜனங்க பாவம்டா. மக்களோட சாபம் உங்களை சும்மா விடாது. ”
by அன்சாரி ,tirunelveli ,India   Oct 31 2011 10:34AM IST
“ ஏன்டா இப்பிடி கொல்றீங்க. படமாடா இது,,,,,, ”
by ராம்,Bangalore,India   Oct 31 2011 10:10AM IST
“ விஜய் சார், நீங்க சூர்யா படம் எல்லாம் பார்க்கிறது இல்லையா....அய்யோ பாவம் ”
by ambu,dublin,Ireland   Oct 31 2011 9:57AM IST
“ இது போல மொக்கை படங்களில் நடிப்பதுக்கு... பேசாமல் விஜய் சினிமா விட்டு போயிடலாம்..... ”
by Sarav,SUNNYVALE,Uzbekistan   Oct 31 2011 9:33AM IST
“ மொக்கை , மொட்டை படம். விஜயின் சினிமாவில் இறுதிக்கட்டம் ஆரம்பமாகி விட்டது. தந்தையின் ஆலோசனை கேட்பது நல்லது! ”
by sgourishankar,Trichy,India   Oct 31 2011 7:08AM IST
“ விஜய் ஒரு வேஸ்ட் படம், அட்டர் பலாப் . என்னோட பணம் வேஸ்ட் போச்சு ”
by sakthi,Erode,India   Oct 31 2011 6:30AM IST
“ இந்த மாதிரி டுபாக்கூரு படத்தை நான் எப்பவுமே நெட்டுல தான் பார்ப்பேன்.. ஏன்னா, தியட்டர் போயி மண்டை காய முடியாது... ஒரு அரை மணி நேரம் பார்த்தேன்.. மகா சொறிப் படம்... இப்பிடி எல்லாமா மனுஷனை வறுத்தெடுப்பாங்க?.. மொக்கையோ மொக்கடா சாமி... ”
by sundar,tiruppur,India   Oct 31 2011 6:05AM IST
“ ஹலோ விஜய், நீயும் உன் அப்பனும் சேர்ந்து நல்ல தயாரிப்பாளர் எல்லாத்தையும் நடு ரோட்டுக்கு கொண்டு வரணும் என்று திட்டம் போட்டு நடக்கிறீங்களா? ப்ளீஸ் டா இந்த பாவம் சும்மா விடாது, உன் குடும்பத்தை! ”
by Riswa,Riyadh,Senegal   Oct 31 2011 1:36AM IST
“ மனசுல என்ன ரஜினியா... ஏன்டா இப்பிடி கொல்லு கொல்லுனு கொல்ரிக. படமாட இது ...ஐயோ ஐயோ ஐயோ ,,,,,, ”
by venkat,mahalapye,Botswana   Oct 31 2011 2:06AM IST
“ ஏழாம் அறிவ பார்த்தேன் ஏழாம் அறிவு வந்தது . Veluaytham பார்த்தேன் இருந்த அறிவு போனது .. ”
by DEEPAK ,Chennai,India   Oct 31 2011 12:24AM IST
“ தலைவா சில நாய் பல karoothucal சொல்லும் அதை எல்லாம் manathil எடுக்க கூடாது. ”
by லியோ john,kanyakumari,India   Oct 30 2011 7:07PM IST
“ இதுவரை விஜய் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார். இப்போது உருபடாமல் போவதற்கு கேப்டன் விஜயகாந்தின் பாணியை காப்பி அடித்திருக்கிறார். இன்னும் சிலபடங்களில் இது போல் தொடர்ந்தால் நிச்சயமாக இளைய தளபதி 'பழைய தளபதி' யாக வேண்டியதுதான். ”
by சந்தானம்,Chennai,India   Oct 30 2011 6:42PM IST
“ விஜய்யும் சந்தானமும் தங்களுக்கு கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். ராஜாவுக்கு ரீமேக் படங்கள் மட்டும் எடுக்க தெரியும் போல, பேசாமல் இந்த கதைக்கு இவர் விஜயகாந்தை தேர்வு செய்திருக்கலாம், Worst screenplay . வேஸ்ட் story . பெட்டெர் லக் next time விஜய். இனி இந்த மாதிரி கதைகளை தேர்வு செய்யாதீர்கள். please ....உங்களிடம் மன்றாடும் விஜய் ரசிகன்...!! ”
by அருண்,Mysore,India   Oct 30 2011 6:38PM IST
“ அட மொக்க படம் பா.............. தியேட்டர் போய் பணத்த வெஸ்ட் பன்னதங்க ”
by அரங்க,bangalore,India   Oct 30 2011 6:25PM IST
“ விஜய் நீ தெலுகு பக்கம் போனால் நல்ல மார்க்கெட்,ஏன் உனக்கு கொல வெறி பாவம் தமிழ் மக்கள் தயவு செய்து விட்டு விடு ”
“ டேய் பொறம்போக்கு விஜய், சும்மா தேவை இல்லாம எங்களை வம்புக்கு இழுக்காதே.ஜாக்கிரதை !
by mujahid Pakafghani,Kandahar,Afghanistan   Oct 30 2011 2:28PM ISTby constantine,maldives,India   Oct 30 2011 2:43PM IST
“ விஜய் சார் நல்லைருகுன்னு படம் பார்த்தவங்க சொல்றாங்க, vaaltukkal ”
by சரவணன்,vatlakundu didigul,India   Oct 30 2011 4:50PM IST

சனி, 22 அக்டோபர், 2011

வெற்றி...

திருமலைப்பாண்டி 503 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி...

ஜான் மார்டின் 215 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி...

நமது கருத்து கணிப்பு அபார வெற்றி...

வியாழன், 13 அக்டோபர், 2011

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருநெல்வேலி





தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இங்கே வந்து கால்பதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் பிஸினஸ் இப்போது புதிய வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது!
மிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி நகரம் பல வகைகளிலும் தனிச் சிறப்பான அடையாளங்களைக் கொண்டது. தமிழக கல்வி மற்றும் அரசியல் வரலாற்றில் திருநெல்வேலி பல மாற்றங் களையும் கொண்டு வந்திருக்கிறது என்கிறது வரலாறு. சுத்தமான தமிழ் பேச்சும், தாமிரபரணி தண்ணீரும் இந்த ஊர்க்காரர்களுக்கு மட்டுமே வாய்த்த தனித்த அடையாளங்கள்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியை தனியாகச் சொல்லிவிட முடியாது. பாளையங்கோட்டையும் இணைந்த இரட்டை நகரம் அது. மதுரைக்கு தெற்கே திருநெல்வேலிதான் முக்கியமான நகரம் என்பதால் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமில்லை. பல சமூக மக்களின் வாழ்க்கை கலாசாரங்களும் கலந்திருக்கும் திருநெல்வேலியை 'மாதிரி நகரம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
''திருநெல்வேலி என்பது ஒரு நகரம் என்பதையும் தாண்டி அது எங்களின் அடையாளம். எந்த ஊரில் இருந்தாலும் இந்த ஊர்க்காரன் என்பதில் உள்ள பெருமிதம் எதிலும் வராதுல்ல!'' என்கிறார், டோனாவூர் ரூபஸ் ஜான் . ''வெளியில இருந்து பாக்குறதுக்கு வேணும்னா ஊரு பரபரப்பா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா, இங்க கொஞ்ச நாள் தங்குனீங்கன்னா இந்த ஊரை விட்டே போக மாட்டீங்கல்ல'' என்கிறார் இவர். பக்கத்துலயே இண்டஸ்ட்ரி ஏரியா தூத்துக்குடி இருக்குறதால வேலைதேடி வெளியூர் போகணுங்குற அவசியம் இல்லை'' என்றவர், சமீப காலங்களில் இந்த ஊரைச் சுற்றியே கங்கைகொண்டான், நாங்குநேரி போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வந்துவிட்டதால் வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். உண்மைதான் விவசாயம்தான் முக்கியமான தொழில் என்றாலும், புதிய தொழில் வாய்ப்புகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள் நாம் சந்தித்த பலரும்.
வளர்ச்சியைப் பொறுத்தவரை தொய்வு கிடையாதுதான். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் முக்கியமான வர்த்தக நகரம் நெல்லைதான் என்பதால், தமிழக அளவில் பல முன்னணி வணிக நிறுவனங்கள் யாவும் போட்டி போட்டுக்கொண்டு நெல்லையில் வந்து இறங்குகின்றன. குறிப்பாக வெளியூர்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் போக்குவரத்து செலவுகளை இந்த நிறுவனங்களே அளித்துவிடுவதால் திருவனந்தபுரத்திலிருந்துகூட மக்கள் ஜவுளிகளையும் பொருட்களையும் வாங்கு வதற்கு நெல்லைக்குதான் வருகிறார்களாம். உள்கட்ட மைப்பு வசதிகள், போக்குவரத்து, சாலைவசதி போன்ற விஷயங்களும் நன்றாகவே இருப்பதால் புறநகர விரிவாக்கமும் சற்று வேகமா கவே இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் புறநகர வளர்ச்சி பல மாற்றங்களையும் கண்டுவருகிறதாம்.

நாகர்கோவில் வழியில் நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் வந்ததிலிருந்து இந்த பக்கம் வளர்ச்சியின் வேகம் அபாரமாக இருக்கிறது. சங்கரன்கோவில் பக்கம் காற்றாலை மின்சார உற்பத்தில் யூனிட்கள் தொடங்கப்பட்டுள்ளதாலும் இந்த பகுதிகள் கடுமையான விலை ஏற்றத்தில் உள்ளன.
அதேபோல வடக்கு மார்க்கத்தில் மதுரை வழியில் கங்கை கொண்டான் ஏரியாவும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வருவதால் இந்தப் பகுதிகளிலும் இடங்கள் மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த வழியில் எல்காட் தாண்டியும் லே-அவுட்கள் போட்டிருக் கிறார்கள். தூத்துக்குடி வழியில் வளர்ச்சியும் விலையும் ஆவரேஜ்தான் என்றாலும், வி.எம்.சத்திரம் வரை மனைகள் கிடைக்கின்றன. தென்காசி ரோடு, பாபநாசம் வழி ஏரியாக்கள் சுமார் விலை நிலவரம்தான்.
ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்தவரை திருநெல்வேலி இப்போதுதான் 'பீக்’ கட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். மொத்தமாக ஒரே தடவை பணத்தைக் கொடுத்து மனைகள் வாங்குவதாக இருந்தாலும், தவணைதிட்டங்கள் மூலமும் மனைகள் விற்பனை நடக்கின்றன. வேய்ந்தான்குளம், கே.டி.சி. நகர் போன்ற ஒரு சில ஏரியாக்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சமீப காலங்களாக டவுன்ஷிப் குடியிருப்புகள் முறையும் திருநெல்வேலி பக்கம் எட்டிபார்த்துக் கொண்டிருக்கிறது.
'' புதிய பொருளாதார மண்டலங்கள் இங்கு வந்ததிலிருந்து வெளியூர்களிலிருந்தும் ஆட்கள் வரத்தொடங்கியிருப்பதால், அவர்களுக்கேற்ப குடியிருப்புகள்
தேவையாயிருக்கிறது. ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்கு விரும்புவதால், நெல்லையின் ரியல் எஸ்டேட் தொழிலின் அடுத்த கட்டம் டவுன்ஷிப் மனைகள்தான் என்கிறார், டோனாவூர்  சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் s.செல்லம்...
புறநகர் பகுதிகள் முக்கியமான பிஸினஸ் ஏரியாக்களாக வளர்ந்து வருவதால் லே-அவுட் இடங்கள் குறைவாகவே பார்க்க முடிகிறது. தெற்கு மற்றும் மேற்கு பக்கங்களில் விவசாய நிலங்களாகவே இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் வறண்ட பகுதிகளாக இருப்பதும் நெல்லையின் ரியல் எஸ்டேட் பல ஏற்ற இறக்கங்களும் கொண்டதாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் தொழில்வளர்ச்சி சார்ந்து அடுத்த கட்டத்தில் இருப்பதும் ரியல் எஸ்டேட் நிலவரத்தில் எதிரொலிக்கிறது என்றாலும், விலைகளைப் பொறுத்தவரை இப்போதைய நிலவரப்படி பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

சிறுதொழில்


பணப் பிரச்னையை சமாளிக்க பக்கா வழிகள்!

சிறுதொழில்

'வாரம் ஒரு தொழில்’ தொடர் மூலம் தொழில் துவங்க வழிகாட்டிய கையோடு புதிய தொழில் ஆரம்பிக்க தேவைப்படும் நிதிக்கான வழிகள் குறித்து இந்த இதழில் பார்க்கலாம்...
காத்திருக்கும் வங்கிகள்!
புதிதாக சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய விரும்புகி றவர்கள் பணத்திற்கு எங்கே போவது என்று கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தனிப்பட்ட நிதி நிறுவனங்களும் தொழிற்கடன் தருவதற்கு தயாராகவே இருக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு வங்கிகள் சிறு தொழில்களுக்கு எவ்வளவு கடன் தந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும் (பார்க்க பெட்டிச் செய்தி), புதிதாக தொழில் தொடங்க வருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, நம்பிக்கையோடு புறப்படுங்கள். வெற்றி நிச்சயம்!

நீங்கள் யார்?
தொழிற்கடனைப் பெறுவதற்கு முன், நீங்கள் யார் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை வைத்து மூன்று விதமாகப் பிரித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்கள் குறுந் தொழில்கள் (மைக்ரோ) எனவும், 25 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வரைக்குமான தொழில்களை சிறு தொழில்கள் (ஸ்மால்) எனவும் 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்க்குள் நடக்கும் தொழில்களை நடுத்தர தொழில்கள் (மீடியம்) என பிரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புதிதாக தொடங்கப் போகும் தொழில் இந்த மூன்று வகையில் எதில் அடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கான கடனை எங்கு பெறுவது என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரச்னை இருக்காது.
வங்கியே சிறந்தது!
சிறு தொழில்களுக்கான கடனை தர வங்கிகள் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இதில் வங்கிக் கடன்தான் சிறந்தது என்பது அனுபவசாலிகளின் முடிவு. இதற்கு முக்கிய காரணம், வட்டி. பொதுவாக, பொதுத் துறை வங்கிகள் அளிக்கும் தொழிற்கடனுக்கு 13 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. ஆனால், அரசு சாராத தொழில் வங்கிகள் ஓரளவுக்கு தாராளமாகவே கடன் தந்தாலும், அதற்காக வசூலிக்கும் வட்டி விகிதமும் அதிகமே. தனியார் வங்கிகள் 13 முதல் 15% வரை வட்டி விதிக்கின்றன.
இதுவாவது பரவாயில்லை, சில தனியார் நிதி நிறுவனங் களும் சிறு தொழில்களுக்கான கடனைத் தருகின்றன. இந்த கடனுக்கு அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தைக் கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டி (கிட்டத்தட்ட 60 சதவிகிதம்!) இதைக் கொள்ளை வட்டி என்றுதான் சொல்ல வேண்டும். தப்பித் தவறி இந்த கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குண்டுகட்டாக நம்மை தூக்கிக் கொண்டு போய் கிட்னியை எடுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குறித்த காலக் கடன்!
புதிதாக தொழில் தொடங்குபவர்களாக இருக்கட்டும், ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களாக இருக்கட்டும், வங்கிகள் அளிக்கும் குறித்த காலக் கடன் என்கிற இந்த டேர்ம் லோனை தாராளமாக வாங்கலாம். மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை குறுகிய காலக் கடன் என்றும், ஏழு ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை நடுத்தர காலக் கடன் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் திரும்பச் செலுத்தும் கடனை நீண்ட கால கடன் என்றும் சொல்லப் படுகிறது.
இந்த டேர்ம் லோனை பெற உங்களிடம் சொத்து இருக்க வேண்டும். தவிர, இருவர் உங்களுக்கு ஜாமீனும் தரவேண்டும். தொழிலுக்கான முழுப் பணமும் உங்களுக்கு கடனாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களிடமும் 10 முதல் 25% தொகை இருக்க வேண்டும். புதிதாக ஆரம்பிக்கும் தொழிலில் உங்கள் முதலீடு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே தொழில் நடத்துவதில் உங்களுக்கு அக்கறை இருக்கும் என வங்கிகள் நினைப்பதால்தான் அவை இதை எதிர்பார்க்கின்றன.
நடைமுறை மூலதன கடன்!
வங்கி பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'வொர்க்கிங் கேபிட்டல்’. இந்த வொர்க்கிங் கேபிட்டல் இருந்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். 'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ என்று சொல்லப்படும் இந்த நடைமுறை மூலதனக் கடனை வங்கிகளிலிருந்து இரண்டு விதமாகப் பெறலாம். ஒன்று, ஹைப்பாத்திகேஷன் என்று அழைக்கப்படுவது. இந்த முறையில் வங்கி மூலப் பொருளுக்கு கடன் கொடுக்கும். இந்த பொருளை பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் கடன் கிடைக்கும்.
வங்கி தரும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் வங்கியே அதை ஒரு குடோனில் அடைத்து வைத்து, தேவைப்படுகிறபோது நாம் பணம் கொடுத்தால் வங்கி எடுத்துத் தரும். இதன் மூலம் ஒரே சமயத்தில் நாம் மொத்த மூலப் பொருளுக்கும் பணம் திரட்ட வேண்டியதில்லை.
'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ லோன் பெற சொத்தை காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
25 லட்ச ரூபாய் வரையிலான வொர்க்கிங் கேபிட்டல் கடனை பெற எந்த வகையான சொத்தையும் வங்கிகள் அடமானமாக கேட்கக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை. காரணம், சொத்து ஏதும் பெறாமல் கொடுத்த கடன் திரும்ப வராததே இதற்கு காரணம்.

வென்ச்சர் கேபிட்டல்!
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.
பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.
ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.
வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.
மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்!
இதெல்லாம் இருக்கிறதா?
 தொழிற்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது இதெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார் கேபிட்டல் மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.
* புராஜெக்ட் ரிப்போர்ட் கட்டாயம் தேவை!
நீங்கள் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? மூலப் பொருளை எங்கு வாங்குவீர்கள்? உற்பத்தியான பொருளை எங்கே விற்பீர்கள்? என்கிற மாதிரியான கம்ப்ளீட் ரிப்போர்ட்தான் இந்த புராஜெக்ட் ரிப்போர்ட். இந்த ரிப்போர்ட் இல்லாதவர்களிடம் வங்கி அதிகாரிகள் ஒன்றிரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார்கள்.
* 20 - 25% முதலீடு தேவை!
நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கான முழு முதலீட்டையும் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் பங்களிப்பாக 20 - 25% முதலீடு கட்டாயம் இருக்க வேண்டும். இது பணமாகவும் இருக்கலாம்; உங்கள் தொழிலுக்குத் தேவையான ஒரு இயந்திரத்தை வாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது அட்வான்ஸ் தந்திருக்கலாம்; மூலப் பொருளாக வாங்கி வைத்திருக்கலாம். 
* சொத்து, ஜாமீன் தேவை!
வங்கி உங்களுக்கு அளிக்கும் கடனுக்கு ஈடான ஒரு சொத்தையும் ஜாமீனையும் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. பெரிய அளவில் சொத்தோ, ஜாமீனோ கொடுக்க இயலாதவர்கள் வங்கியிடம் கடன் கேட்காமல் இருப்பதே நல்லது.
* அத்தனையும் அறிந்தவராக இருங்கள்!
நீங்கள் தொடங்கப் போகும் தொழில் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக இருங்கள். வங்கி உங்களுக்கு கடனுதவி மட்டுமே செய்யும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை சமாளிக்க வங்கி எந்த விதத்திலும் உதவாது என்பதை மறக்காதீர்கள்.




ஜெயலலிதாவிடம் திரும்பிய கூடங்குளம் விவகாரம்!


கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடந்து​வரும் மக்கள் போராட்டம், அதன் இறுதிக் கட்டத்தைத் தொட்டேவிட்டது. ஜெயலலிதா எடுத்த முயற்சியின் பயனாக, கடந்த 6-ம் தேதி தமிழக அரசின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. எம்.பி-க்கள் தம்பிதுரை, வா.மைத்ரேயன், பி.ஜே.பி. நிர்வாகி சரவணப் பெருமாள் மற்றும்
போராட்டக் குழுவின் சார்பில் சுப.உதயகுமாரன் தலைமையில் வழக்​கறிஞர் சிவசுப்பிரமணியன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் தலைவர் புஷ்பராயன், தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் ஆம்புரோஸ், மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆண்டன் கோமஸ் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர்.
பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை குறித்து சுப.உதயகுமாரன், ''நாங்கள் ஒரு குழுவாக இருந்தாலும், இரண்டு பிரிவுகளாகத்தான் பிரிந்து நின்றோம்...'' என்று பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.
''பிரதமர் வீட்டில் இருந்தே அணு சக்தித் துறையைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பானர்ஜி, எஸ்.கே.ஜெயின், தேசியப் பாதுகாப்பு அறிவுறுத்துனர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பிரதமருடன் சேர்ந்து வந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்றாலும் வந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில், 'நம் நாட்டில் இருக்கும் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை’ என்று சொன்னபிரதமர், எங்கள் கருத்துகளைக் கேட்டு முகம் சிவந்தார். '2008-ம் ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் போடப் பட்டது. அதில் இந்தியா ஏற்படுத்தி இருக்கும் அணு விபத்து இழப்பீட்டுச் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று ரஷ்யா கூறி இருக்கிறதே... அது எப்படி?’ என்று கேட்டதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. 'இந்த ரஷ்யத் தொழில்நுட்பம், தோல்வியடைந்த தொழில்நுட்பம் என்று சொல்லி 25 குறைபாடுகளை ரஷ்யாவில் இருக்கும் ஓர் ஆய்வு நிறுவனமே சொல்லி இருக்கிறதே?’ என்று பல கேள்விகள் கேட்டோம். பிரதமரிடம் இருந்து பதிலே இல்லை...'' என்றார்.
அடுத்துப் பேசிய புஷ்பராயன், ''1988-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது மக்களிடம் கருத்துக் கேட்பது, சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற எந்தத் தகவலையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல, அப்போது இருந்த கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படி, முதல் இரண்டு உலைகளைக் கட்டினார்கள். தற்போது, மேலும் நான்கு உலைகளைக் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். 2011-ம் வருடத்திய கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படிதான் இவர்கள் செயல்பட வேண்டும். அப்படிப் பார்த்தால், இந்த நான்கு உலைகளைக் கட்ட முடியாது. அதை மீறி இவர்கள் செயல்படு​கிறார்​கள்!'' என்று  சொன்​னார்.
'இந்தத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துங்கள்’ என்கிறார்கள் போராட்டக் குழுவினர். 'மக்களின் பயத்தைப் போக்கும் வரை, இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்​துங்கள்’ என்கிறது தமிழக அரசு. இனி செய்ய வேண்டியது எல்லாம் மத்திய அரசின் கையில்... மாநில அரசு போட்ட தீர்மானத் துக்கு மரியாதை இல்லாத வகையில், இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே 'இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என நம் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர்.
முதல்வரின் அடுத்த மூவ் என்னவோ?
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினரின் போராட்டத்தின்  பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் அந்த சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தை களம் இறக்கி இருப்பதாகவும், இந்திய அணு சக்தித் துறையினர் மத்தியப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கி இருப்பதாகப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.  சுப.உதயகுமாரனிடம் கேட்டபோது, ''அணு சக்திக்கு எதிராகப் போராடும் அடித்தட்டு மக்களைக் கொச்சைப்படுத்தும் காரியம் இது. எங்கள் போராட்டத்துக்கான நிதி உள்ளூர் மக்களும் ஏழை மீனவர்களும் வழங்கிய கொடைதான். எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்...'' என்றார் காட்டமாக!

கூடங்குளம் போராட்டம் தீவிரம்: போலீஸார் குவிப்பு

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாலும், கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களை தடுத்து நிறுத்தியதாலும் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

இடிந்தகரையில் இன்று 5-வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் ஆதரவு தெரிவித்து களத்தில் குவிந்துள்ளனர்.

அணு மின் நிலைய பணிக்கு சென்றவர்களை நேற்று கூடங்குளம் பொதுமக்கள்  திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சமரசம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் பேருந்துகளில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தபோது, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போலீஸார் கண்ணீர்புகை குண்டுகளுடன் குவிக்கப்பட்டனர். இதனால் 4 மணி நேரத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்தது.